292காறை பூணும் கண்ணாடி காணும் தன்
      கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
      தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே             (8)