293கைத்தலத்து உள்ள மாடு அழியக்
      கண்ணாலங்கள் செய்து இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
      நம்மை வடுப்படுத்தும்-
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
      செய்வன செய்துகொள்ள
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
      வளர விடுமின்களே             (9)