294பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
      பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
      வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்து இடுமின் இவளை
      உலகளந்தான் இடைக்கே             (10)