295ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்
      நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று
      தாய் உரை செய்ததனை
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்
      விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு
      இல்லை வரு துயரே             (11)