3ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
      எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
      வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
      நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
      பல்லாண்டு கூறுமினே             (3)