300தம் மாமன் நந்தகோபாலன்
      தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
செம்மாந்திரே என்று சொல்லி
      செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும்
      கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர்
      இனித் தரியார் என்னுங் கொல்லோ?             (5)