302அண்டத்து அமரர் பெருமான்
      ஆழியான் இன்று என்மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து
      கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே
      பாதுகாவல் வைக்குங் கொல்லோ?            (7)