3029ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்
பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே             (4)