303குடியிற் பிறந்தவர் செய்யும்
      குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்
      நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க
      இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்
கடைகயிறே பற்றி வாங்கிக்
      கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?             (8)