3038கூவும் ஆறு அறியமாட்டேன்
      குன்றங்கள் அனைத்தும் என்கோ?
மேவு சீர் மாரி என்கோ?
      விளங்கு தாரகைகள் என்கோ?
நா இயல் கலைகள் என்கோ?
      ஞான நல் ஆவி என்கோ?
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
      பங்கயக் கண்ணனையே             (2)