3039பங்கயக் கண்ணன் என்கோ?
      பவளச் செவ்வாயன் என்கோ?
அம் கதிர் அடியன் என்கோ?
      அஞ்சன வண்ணன் என்கோ?
செங்கதிர் முடியன் என்கோ?
      திரு மறு மார்பன் என்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
      சாதி மாணிக்கத்தையே             (3)