304வெண்ணிறத் தோய் தயிர் தன்னை
      வெள்வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து
      கடையவும் தான்வல்லள் கொல்லோ?
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
      உலகளந்தான் என்மகளைப்
பண் அறையாப் பணிகொண்டு
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? (9)