3040சாதி மாணிக்கம் என்கோ?
      சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
      தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?
ஆதி அம் சோதி என்கோ?
      ஆதி அம் புருடன் என்கோ?
ஆதும் இல் காலத்து எந்தை
      அச்சுதன் அமலனையே             (4)