3041அச்சுதன் அமலன் என்கோ?
      அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ?
      நலங் கடல் அமுதம் என்கோ?
அச் சுவைக் கட்டி என்கோ?
      அறுசுவை அடிசில் என்கோ?
நெய்ச் சுவைத் தேறல் என்கோ?
      கனி என்கோ? பால் என்கேனோ?             (5)