3042பால் என்கோ? நான்கு வேதப்
      பயன் என்கோ? சமய நீதி
நூல் என்கோ? நுடங்கு கேள்வி
      இசை என்கோ? இவற்றுள் நல்ல
மேல் என்கோ? வினையின் மிக்க
      பயன் என்கோ? கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ?
      வானவர் ஆதியையே             (6)