3043வானவர் ஆதி என்கோ?
      வானவர் தெய்வம் என்கோ?
வானவர் போகம் என்கோ?
      வானவர் முற்றும் என்கோ?
ஊனம் இல் செல்வம் என்கோ?
      ஊனம் இல் சுவர்க்கம் என்கோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ?
      ஒளி மணி வண்ணனையே             (7)