3044ஒளி மணி வண்ணன் என்கோ?
      ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ?
      நான்முகக் கடவுள் என்கோ?
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
      படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
      கண்ணனை மாயனையே             (8)