3045கண்ணனை மாயன் தன்னை
      கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
      அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
      ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
      யாவையும் எவரும் தானே             (9)