3050மலையை எடுத்து கல் மாரி
      காத்து பசுநிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
      சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்டத்
      தடுகுட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
      கிடந்து உழைக்கின்ற வம்பரே             (3)