3052சாது சனத்தை நலியும்
      கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
      அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
      வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
      என் சவிப்பார் மனிசரே?             (5)