3054நீர்மை இல் நூற்றுவர் வீய
      ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
      பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
      நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
      உத்தமர்கட்கு என் செய்வாரே?             (7)