3055வார் புனல் அம் தண் அருவி
      வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றி
      பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
      உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
      அமரர் தொழப்படுவாரே             (8)