3056அமரர் தொழப்படுவானை
      அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து
      அவன் தன்னோடு ஒன்று ஆக
அமரத் துணிய வல்லார்கள்
      ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
      அலற்றுவதே கருமமே             (9)