3062வைம்மின் நும் மனத்து என்று யான்
      உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க
      நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
      சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
      சிந்தித்து ஏத்தித் திரிவரே             (4)