3069கண்கள் காண்டற்கு அரியன்
      ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
      அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
      குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
      பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே             (11)