3071ஆளும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக் கையும் கூப்பிப் பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை நாதரே  (2)