3072நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே  (3)