முகப்பு
தொடக்கம்
3075
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)