முகப்பு
தொடக்கம்
3104
குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன்
கோலச் செந்தாமரைக்கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி
வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்
காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யான் ஒரு முட்டு இலனே (2)