3105முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்
      மூவுலகுக்கு உரிய
கட்டியை தேனை அமுதை நன்பாலை
      கனியை கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை
      வணங்கி அவன் திறத்துப்
பட்ட பின்னை இறையாகிலும் யான் என்
      மனத்துப் பரிவு இலனே (3)