முகப்பு
தொடக்கம்
3106
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
அங்கியும் போர் தொலைய
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனை பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான்
இறையேனும் இடர் இலனே (4)