3110அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்
      அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்
      ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு
      எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி
      யான் ஓர் துக்கம் இலனே (8)