முகப்பு
தொடக்கம்
3111
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி
துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும்
எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று
ஒன்றும் தளர்வு இலனே (9)