முகப்பு
தொடக்கம்
3112
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
ஐந்தை இரு சுடரை
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றி
யான் என்றும் கேடு இலனே (10)