3113கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை
      குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும்
      பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
      நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும்
      தரும் ஒரு நாயகமே (11)