3130மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே             (6)