3131மடந்தையை வண் கமலத் திருமாதினை
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே             (7)