3138ஏக மூர்த்தி இரு மூர்த்தி
      மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதம் ஆய்
      இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி
நாகம் ஏறி நடுக் கடலுள்
      துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி
      ஆவி அல்லல் மாய்த்ததே             (3)