3139மாய்த்தல் எண்ணி வாய் முலை
      தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூத் தண் மாலை கொண்டு உன்னைப்
      போதால் வணங்கேனேலும் நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப்
      புனையும் கண்ணி எனது உயிரே             (4)