3140கண்ணி எனது உயிர் காதல்
      கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
      ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
      நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
      கால சக்கரத்தானுக்கே             (5)