3141கால சக்கரத்தொடு வெண்
      சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
      நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
      ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
      கமலம் அன்ன குரைகழலே             (6)