3143என்னது ஆவி மேலையாய்
      ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற
      சோதி ஞான மூர்த்தியாய்
உன்னது என்னது ஆவியும்
      என்னது உன்னது ஆவியும்
இன்ன வண்ணமே நின்றாய்
      என்று உரைக்க வல்லேனே?             (8)