முகப்பு
தொடக்கம்
3144
உரைக்க வல்லேன் அல்லேன் உன்
உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன் (9)