முகப்பு
தொடக்கம்
3145
யானும் ஏத்தி ஏழ் உலகும்
முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை
ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம் பிரானையே
ஏத்தினேன் யான் உய்வானே (10)