3148பெய்வளைக் கைகளைக் கூப்பி
      பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி
      சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று
      நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறுமான்
      செய்கின்றது ஒன்று அறியேனே             (2)