3149அறியும் செந்தீயைத் தழுவி
      அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றைத் தழுவி
      என்னுடைக் கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும்
      வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கைச் சிறுமான்
      செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?             (3)