3150ஒன்றிய திங்களைக் காட்டி
      ஒளி மணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
      நெடுமாலே வா என்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில்
      நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தான்
      என்னுடைக் கோமளத்தையே?             (4)