3155விரும்பிப் பகவரைக் காணில்
      வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில்
      கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல ஆ நிரை காணில்
      பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன்
      அலற்றி அயர்ப்பிக்கின்றானே             (9)