3157வல்வினை தீர்க்கும் கண்ணனை
      வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல்
      ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள்
      நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும்
      தொழுது எழ வீற்றிருப்பாரே             (11)