3160வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே             (3)